நீதித்துறைக்கு தனி நிதி ஒதுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


நீதித்துறைக்கு தனி நிதி ஒதுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 1 July 2021 7:26 AM GMT (Updated: 1 July 2021 7:26 AM GMT)

நீதித்துறைக்கு தனி நிதி ஒதுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

நீதித்துறைக்கு பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ரீபக் கன்சல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள் நீதித்துறைக்கு தனியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்க அரசுக்கு எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர். 

Next Story