தேசிய செய்திகள்

தேவேந்திர பட்னாவிஸ் பேட்டியால் மராட்டிய அரசியலில் பரபரப்பு + "||" + "Shiv Sena Was Never Our Enemy": Devendra Fadnavis On Renewal Of Ties

தேவேந்திர பட்னாவிஸ் பேட்டியால் மராட்டிய அரசியலில் பரபரப்பு

தேவேந்திர பட்னாவிஸ் பேட்டியால் மராட்டிய அரசியலில் பரபரப்பு
சிவசேனா பாஜகவின் எதிரி அல்ல, நண்பர் தான் என்று மரட்டிய முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை,

மராட்டியத்தில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சந்தித்தன. தேர்தலில் அந்த கூட்டணி வெற்றி பெற்றது. பா.ஜனதா 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும், சிவசேனா 50-க்கும் அதிகமான இடங்களிலும் வெற்றி பெற்றன. 

ஆனால் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கூட்டணி உடைந்தது.  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து மகாவிகாஸ் அகாடி அரசை அமைத்தது. 

இந்த நிலையில், மராட்டிய முன்னாள் முதல் மந்திரியும் அம்மாநில பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்று பேட்டி அளித்தார். அப்போது, 

‘எங்கள் நண்பன் (சிவசேனா) கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எங்களுடன் சேர்ந்து போட்டியிட்டது. ஆனால் தேர்தலுக்கு பிறகு அவர்கள், நாங்கள் யாரை (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) எதிர்த்து போட்டியிட்டோமோ அவர்களுடன் கைகோா்த்து கொண்டார். எனினும் அரசியலில் சாத்தியமற்றது என்று எதுவும் கிடையாது. 

சிவசேனாவும், பா.ஜனதாவும் எதிரிகள் கிடையாது. சில விஷயங்களில் எங்களுக்குள் வேறுபாடுகள் இருக்கலாம். சூழல்நிலைக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார். தேவேந்திர பட்னாவிசின் இந்தப் பேட்டி மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேவேந்திர பட்னாவிசின் பேச்சு குறித்து சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்செய் ராவத் கூறியதாவது:- நாங்கள் இந்தியா- பாகிஸ்தான் கிடையாது.  எங்களின் அரசியலில் வெவ்வேறாக இருந்தாலும் நட்பு அப்படியேதான் நீடிக்கும்” என்றார்.  

தொடர்புடைய செய்திகள்

1. உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகள் வரை போட்டியிடுவோம்: சிவசேனா
உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகள் வரை போட்டியிடுவோம் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
2. குஜராத்தின் அடுத்த முதல் மந்திரி யார்? பாஜக மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை
குஜராத் முதல் மந்திரியாக இருந்து வந்த விஜய் ரூபானி நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
3. காங்கிரஸ் 70 ஆண்டுகளில் உருவாக்கியதை பாஜக 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது; ராகுல் காந்தி
புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராக எந்த ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
4. போலீசார் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்: தேவேந்திர பட்னாவிஸ்
காவல்துறையில் மாநில அரசு தலையீடு அதிகரித்து இருப்பதாகவும், போலீசார் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
5. உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் களமிறங்கும் சிவசேனா
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் சிவசேனா போட்டியிட உள்ளது.