இந்தியாவில் கடந்த 111 நாட்களில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்தது

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
புதுடெல்லி,
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 43 ஆயிரத்து 71 பேருக்கு தொற்று பாதித்து இருந்தது. நேற்று 39 ஆயிரத்து 796 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த 111 நாட்களில் இல்லாத அளவாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 34,703- ஆக குறைந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 357- ஆக சரிந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 51,864- ஆக உள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 97.17 % ஆக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.11 சதவிகிதமாக உள்ளது. கடந்த 15 தினங்களாக தொற்று பாதிப்பு விகிதம் 3 சதவீதத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது.
Related Tags :
Next Story