பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை விரிவாக்கம்: 43 புதிய மந்திரிகள் பதவியேற்பு

43 புதிய மந்திரிகளுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய மந்திரிசபையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், முதன்முறையாக மத்திய மந்திரிசபை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.
இதன்படி டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் புதிய மந்திரிகளின் பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட மந்திரிசபையில் 43 பேர் இடம்பெற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 43 புதிய மத்திய மந்திரிகளுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார். புதிய மத்திய மந்திரிசபையில் 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். புதிய மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள 14 பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் ஆவார்.
மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும்நிலையில், 12 மத்திய மந்திரிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதன்படி புதிய அமைச்சரவை அமைய ஏதுவாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் மற்றும் கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் தனது பதவியை ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்த்தன் உள்ளிட்டோர் ராஜினாமா செய்தனர். மந்திரிசபை விரிவாக்கத்துக்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோரும் ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
புதிய மந்திரிகளாக பதவியேற்றுக் கொண்டவர்களின் பெயர்கள்:-
1) நாராயண் ரானே (மராட்டியம்)
2) சர்வானந்தா சோனாவால் (அசாம்)
3) வீரேந்திர குமார் (மத்திய பிரதேசம்)
4) ஜோதிர் ஆதித்ய சிந்தியா (மத்திய பிரதேசம்)
5) ஆர்.சி.பி. சிங் ( பீகார்)
6) அஷ்வினி வைஷ்ணவ் (ஒடிசா)
7) பசுபதி குமார் பராஸ் (பீகார்)
8) கிரண் ரிஜிஜூ (அருணாச்சல பிரதேசம்)
9) ராஜ்குமார் சிங் (பீகார்)
10 ) ஹர்தீப் சிங் பூரி (பஞ்சாப்)
11) மன்சுக் மாண்டவியா (குஜராத்)
12) பூபேந்தர் யாதவ் (ராஜஸ்தான்)
13) புருசோத்தம் ரூபாலா (குஜராத்)
14) கிஷன் ரெட்டி (தெலுங்கானா)
15) அனுராக் சிங் தாகூர் (இமாச்சல பிரதேசம்)
16) பங்கஜ் சவுத்ரி (உத்தர பிரதேசம்)
17) அனுபிரியா சிங் படேல் (உத்தர பிரதேசம்)
18) டாக்டர் சத்யபால் சிங் பாகேல் (உத்தர பிரதேசம்)
19) ராஜீவ் சந்திர சேகர் (கர்நாடகா)
20) ஷோபா கரண்ட்லேஜே (கர்நாடகா)
21) பனு பிரதாப் சிங் வர்மா (உத்தர பிரதேசம்)
22) தர்சனா விக்ரம ஜர்தோஷ் (குஜராத்)
23) மீனாட்சி லெகி (டெல்லி)
24) அனுப்பிரியா தேவி (ஜார்கண்ட்)
25) ஏ.நாராயணசாமி (கர்நாடகா)
26) கவுசல் கிஷோர் (உத்தரபிரதேசம்)
27) அஜய் பட் (உத்தரகாண்ட்)
28) பி.எல்.வர்மா (உத்தரபிரதேசம்)
29) அஜய் குமார் (உத்தரபிரதேசம்)
30) சவுகான் தேவு சிங் (குஜராத்)
31) பகவந்த் குபா (கர்நாடகா)
32) கபில் மோர்சவர் படேல் (மராட்டியம்)
33) சுஷ்ரி பிரதிமா பவுமிக் (திரிபுரா)
34) சுபாஷ் சர்கார் (மேற்கு வங்காளம்)
35) பக்வத் கிஷண்ராவ் காரத் (மராட்டியம்)
36) ராஜ்குமார் ரஞ்சன் சிங் (மணிப்பூர்)
37) பார்தி பிரவின் பவார் (மராட்டியம்)
38) பிஸ்வேஸ்வர் துடு (ஒடிசா)
39) சாந்தனு தாகூர் (மேற்கு வங்காளம்)
40) முஞ்சபரா மகேந்திரபாய் (குஜராத்)
41) ஜான் பர்லா (மேற்கு வங்காளம்)
42) எல்.முருகன் (தமிழகம்)
43) நிஷித் பிரமனிக் (மேற்கு வங்காளம்)
Related Tags :
Next Story