டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 July 2021 6:20 PM IST (Updated: 8 July 2021 6:20 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. ஆனால் இந்த 2 ஆண்டுகளில் ஒரு முறைகூட மத்திய மந்திரிசபையில் மாற்றமோ, விரிவாக்கமோ செய்யப்படாமல் இருந்தது. 

இந்த நிலையில், மத்திய மந்திரிசபையில் மாற்றங்கள் செய்ய வசதியாக 12 மந்திரிகள் நேற்று ராஜினாமா செய்தனர். 12 மந்திரிகளின் ராஜினாமாக்களை பிரதமர் மோடியின் பரிந்துரை பேரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து மத்திய மந்திரிசபையில் புதிய மந்திரிகளின் பதவி ஏற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடந்தது. இதில் புதிதாக 43 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சிறுகுறு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நாராயன் ரானே, விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் , சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத், மீன்வளதுறை அமைச்சர் பரிசோத்தம் ரூபாலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்ட 30 மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், அமைச்சர் (தனி பொறுப்பு), இணை அமைச்சர் என 77 அமைச்சர்களுடன் இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் சில அமைச்சர்கள் வீடியோ காண்பிரன்ஸ் மூலம் கலந்து கொள்வார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Next Story