டெல்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான ஐபோன்கள் பறிமுதல்


டெல்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான ஐபோன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 July 2021 12:52 PM IST (Updated: 9 July 2021 12:52 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான ஐபோன்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.




புதுடெல்லி,

டெல்லி விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில் இருந்த பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.  இதில், துபாயில் இருந்து வந்த சரக்கு பொருட்களில், துணிமணிகள் என்று தவறாக குறிப்பிடப்பட்டு வந்த பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதில் மொத்தம் 90 ஐபோன் 19 புரோ மாடல்கள் இருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.  அவை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  

அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.  தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.




Next Story