300 யூனிட் மின்சாரம் இலவசம்: உத்தரகாண்ட்டில் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி


300 யூனிட் மின்சாரம் இலவசம்:  உத்தரகாண்ட்டில் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி
x
தினத்தந்தி 11 July 2021 5:40 PM IST (Updated: 11 July 2021 5:40 PM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்ட் மாநிலத்தில் வருகின்ற 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடை பெறவுள்ளது.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் வருகின்ற 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடை பெறவுள்ளது. இந்த சூழலில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தரகாண்ட் சென்றார். 

டேராடூனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள கெஜ்ரிவால்,அம்மாநில மக்களுக்கு நான்கு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.  கெஜ்ரிவால் கூறுகையில், “  300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கும். 

24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க சிறிது காலஅவகாசம் எடுக்கும், ஆனால் நாங்கள் அதை செய்வோம்.  ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்த வரியும் உயர்த்தப்படாது. மாநிலம் கடன்களையும் கோராது” என்றார். 

Next Story