காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை


காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை
x
தினத்தந்தி 12 July 2021 3:49 PM IST (Updated: 12 July 2021 3:49 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரின் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

ஸ்ரீநகர்,

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டுத்த ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் முயற்சிகள் நடத்ததாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து நேற்று காஷ்மீரின் ஸ்ரீநகர், அனந்தாக் போன்ற மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட இளைஞர்களை மூளைச்சலவை செய்த இஸ்லாமிக் செமினெரி தலைவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், காஷ்மீரில் இரண்டாவது நாளாக இன்றும் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது. தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையால் காஷ்மீரில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. 

Next Story