உத்தரகாண்டில் நிலச்சரிவு, வெள்ளம்; ஆற்றில் ஆபத்து நிறைந்த பயணம்


உத்தரகாண்டில் நிலச்சரிவு, வெள்ளம்; ஆற்றில் ஆபத்து நிறைந்த பயணம்
x
தினத்தந்தி 13 July 2021 12:01 PM IST (Updated: 13 July 2021 12:01 PM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்டில் நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றுக்கு இடையே ஆற்றின் வழியே மக்கள் ஆபத்து நிறைந்த பயணம் மேற்கொள்கின்றனர்.



டேராடூன்,

உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் தப்ரானி பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.  இந்த நிலச்சரிவால், கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது.  அதனை சரிசெய்யும் பணியில் எல்லை சாலைகள் அமைப்பின் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டேராடூன் மாவட்டத்தில் கனமழை பெய்து ஆம்லாவா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  எனினும், ஆற்றின் மறுகரைக்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லை.  இதனால், தற்காலிக பாலம் வழியே மக்கள் பயணிக்கின்றனர்.

எனினும், ஆற்று பாலம் கனமழையால் பலத்த சேதம் அடைந்து உள்ளது.  ஆனால், வேலைக்கு செல்லும் மக்கள், சிலர் ஆபத்து நிறைந்த வெள்ள நீரின் வழியே தற்காலிக பாலத்தின் மீது ஆற்றை கடந்து செல்கின்றனர்.


Next Story