முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ல் நடைபெறும் என அறிவிப்பு


முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ல் நடைபெறும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 13 July 2021 7:11 PM IST (Updated: 13 July 2021 7:11 PM IST)
t-max-icont-min-icon

முதுகலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்' என்ற நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு வரும்  செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சமூக வலைதளமான டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

Next Story