பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழை: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வீடுகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட கனமழை காரணமாக, 30-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.
காஷ்மீர்,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது.
இதனால் அங்குள்ள நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் வெள்ளம் புகுந்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், 2 பேர் மாயமாகி உள்ளனர்.
இதுதொடர்பாக ஏ.ஜே.கே பிரதமர் ராஜா பாரூக் ஹைதர் தனது டுவிட்டரில், “நான் நீலம் மாவட்ட ஆட்சியருடன் பேசினேன். காணாமல் போன 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார், அந்த பகுதிக்கு அருகிலேயே வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளார் மீட்புப் பணிகள் விடியற்காலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று அதில் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story