ஜம்மு மத்திய சிறைச்சாலையில் அதிரடி சோதனை - செல்போன்கள் பறிமுதல்


ஜம்மு மத்திய சிறைச்சாலையில் அதிரடி சோதனை - செல்போன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 15 July 2021 4:08 PM IST (Updated: 15 July 2021 4:08 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு மத்திய சிறைச்சாலையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கைதிகள் வைத்திருந்த 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கோட்பஹல்வால் பகுதியில் ஜம்மு மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்பட பல்வேறு தரப்பு குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு மத்திய சிறைச்சாலையில் சிஐடி பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சிறைக்கைதிகள் செல்போன்கள் பயன்படுத்திவந்தது தெரியவந்தது. சோதனையில் கைதிகளிடம் இருந்து 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் செல்போன் பயன்படுத்திய கைதிகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனரா? என்பது குறித்தும் இந்த சம்பவம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஜம்மு மத்திய சிறைச்சாலையில் கடந்த 15 நாட்களில் 17 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story