மத்திய பிரதேசம்: கிணற்றில் தவறி விழுந்தவர்களில் 19 பேர் மீட்பு, பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு


மத்திய பிரதேசம்: கிணற்றில் தவறி விழுந்தவர்களில் 19 பேர் மீட்பு, பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 July 2021 11:38 PM IST (Updated: 16 July 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

போபால், 

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்துள்ளனர்.

அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால், அது இடிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றை ஒட்டி நின்று கொண்டிருந்த சுமார் 30 பேர் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்ததும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதில் 19 - பேர்   காயங்களுடன்  மீட்கப்பட்டுள்ள நிலையில்,  10 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும்  சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். 


Next Story