இமாசல பிரதேசத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுப்பு


இமாசல பிரதேசத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுப்பு
x
தினத்தந்தி 17 July 2021 11:58 PM GMT (Updated: 2021-07-18T05:28:15+05:30)

இமாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

ஷிம்லா,

வட மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 

18- ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் மாநில நிர்வாகங்களுக்கு விடுத்துள்ளது.  

கனமழையால் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இந்த ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இமாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story