மராட்டியத்தில் புதிதாக 6,910- பேருக்கு கொரோனா


மராட்டியத்தில் புதிதாக 6,910- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 July 2021 7:58 PM GMT (Updated: 2021-07-21T01:28:30+05:30)

மராட்டியத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறைந்தது. இதில் மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 910 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

மும்பை, 

மராட்டியத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறைந்தது. இதில் மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 910 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை தொற்றால் 62 லட்சத்து 29 ஆயிரத்து 595 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 60 லட்சத்து 91 பேர் குணமடைந்தனர். தற்போது 94 ஆயிரத்து 593 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மாநிலத்தில் மேலும் 147 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் இதுவரை வைரஸ் நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 753 ஆக உயர்ந்து உள்ளது. மாநிலத்தில் நேற்று அதிகபட்சமாக சத்தாராவில் 821 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் அங்கு 30 பேர் பலியானார்கள்.

தலைநகர் மும்பையிலும் நேற்று தொற்று பாதிப்பு குறைந்தது. நகரில் புதிதாக 351 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் 10 பேர் பலியானார்கள். நகரில் இதுவரை 7 லட்சத்து 31 ஆயிரத்து 914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 726 பேர் உயிரிழந்து உள்ளனர்.

நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 1063 நாட்களாக உள்ளது. தொற்று பாதித்தவர்களில் 97 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். தாராவியில் நேற்று புதிதாக 6 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அங்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்து உள்ளது.


Next Story