உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.4 ஆக பதிவு


உத்தரகாண்டில் நிலநடுக்கம்:  ரிக்டரில் 3.4 ஆக பதிவு
x
தினத்தந்தி 23 July 2021 8:52 PM GMT (Updated: 2021-07-24T02:22:56+05:30)

உத்தரகாண்டில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.உத்தர்காஷி,


உத்தரகாண்டின் உத்தரகாஷி பகுதியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் கிழக்கே இன்று அதிகாலை 1.28 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 3.4 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் மக்கள் தூக்கத்தில் இருந்து பதறியடித்து கொண்டு ஓடினர்.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.


Next Story