மத்திய அரசுக்கான நிலுவைத்தொகை; தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு

ஏர்டெல், ஐடியா, வோடபோன் உள்ளிட்ட பல்வேறு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், 1999-ல் கொண்டுவரப்பட்ட தேசிய அளவிலான புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் குறிப்பிட்ட தொகையை ஆண்டு லைசன்ஸ் கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும்.
அவ்வாறு இந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய ரூ.92 ஆயிரம் கோடி ஏ.ஜி.ஆர். நிலுவைத்தொகையை மறுகணக்கீடு செய்யக் கோரி வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல், டாடா டெலி சர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. அந்த மனுக்களை நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அது தொடர்பாக நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவில், மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய தொகையை மறுகணக்கீடு செய்ய கூறிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story