தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை; மத்திய மந்திரியிடம், கவர்னர் தமிழிசை வலியுறுத்தல் + "||" + Flights to Puducherry to be resumed soon; To the Union Minister, the Governor Tamilisai Soundararajan

புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை; மத்திய மந்திரியிடம், கவர்னர் தமிழிசை வலியுறுத்தல்

புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை; மத்திய மந்திரியிடம், கவர்னர் தமிழிசை வலியுறுத்தல்
புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கவேண்டும் என்று மத்திய மந்திரியிடம், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.
கவர்னர் மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விமான சேவை
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மீண்டும் விமான சேவையை தொடங்கவேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது புதிதாக பொறுப்பு ஏற்றுள்ளதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.மேலும் புதுச்சேரியில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது, இரவு நேரங்களில் விமானங்கள் இறங்குவதற்கு வசதியாக விமான ஓடுதள பாதையை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் பேசினார்.

உடான் திட்டம்
ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக காரைக்கால் கோவில் நகரத்தை உடான் திட்டத்தின்கீழ் கொண்டு வருவது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.அதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்துத்துறை மந்திரி உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரி - விநாயகர் சதுர்த்தி நெறிமுறைகள் வெளியீடு
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் சிலை வைப்பது தொடர்பாக, வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
2. புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கலாம் - தமிழிசை சௌந்தரராஜன்
கொரோனா கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தியை மக்கள் கொண்டாட வேண்டும் என்று அம்மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தி உள்ளார்.
4. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு பிரதமரிடம் நேரில் வலியுறுத்துவேன்: முதல்-அமைச்சர் ரங்கசாமி
ஆதிதிராவிட முதியோர் பெற்று வரும் உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்படும். மாநில அந்தஸ்து கேட்டு பிரதமரிடம் நேரில் வலியுறுத்துவேன் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
5. புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறப்பு
புதுவையில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.