மாநிலங்களுக்கு இதுவரை 45.37 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது: மத்திய அரசு தகவல்

மாநிலங்களுக்கு இதுவரை 45.37 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,742- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிப்பில் இருந்து 39,972 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 535- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 08 ஆயிரத்து 212 ஆக உள்ளது.
இந்நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியத் தொகுப்பில் இருந்து இதுவரை 45.37 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு இதுவரை, 45.37 கோடிக்கும் அதிகமான (45,37,70,580) தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 11,79,010 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.
மொத்தம் 42,08,32,021 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 3.29 கோடி (3,29,38,559) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story