உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் சந்திப்பு

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சந்தித்தனர்.
புதுடெல்லி,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லி வந்தனர். இவர்களுடன் அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், பி.எச்.மனோஜ்பாண்டியன் ஆகியோரும் வந்தனர்.
பின்னர் இவர்கள் காலை 11 மணி அளவில் நாடாளுமன்ற வளாகம் சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தனர். அப்போது எம்.பி.க்கள் தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன், சந்திரசேகர், பி.ரவீந்திரநாத்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர். பின்பு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சுமார் அரைமணிநேரம் பிரதமர் மோடியுடன் உரையாடினர். அப்போது பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சந்தித்தனர்.சந்திப்பின் போது அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணியும் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story