தேசிய செய்திகள்

பிச்சை எடுப்பதை தடை செய்ய உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் மறுப்பு + "||" + Won't Take Elitist View; Begging Not Out Of Choice' : Supreme Court Turns Down Plea To Stop Street Begging Amid COVID

பிச்சை எடுப்பதை தடை செய்ய உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் மறுப்பு

பிச்சை எடுப்பதை தடை செய்ய உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் மறுப்பு
யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை. எனவே, பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

கொரோனா பெருந்தொற்று சூழலில் தெருக்களிலும், சாலைகளில் பிச்சை எடுப்பதற்கு  தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பிச்சை எடுப்பதை தடை செய்ய உத்தரவிட மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், 

 “வறுமையின் காரணமாக பிச்சை எடுப்பதை உயர் வர்க்க கண்ணோட்டத்தில் இருந்து பார்க்க விரும்பவில்லை. யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை. எனவே, பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது. தடை செய்வதை விட பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு வழங்குவதுதான் தற்போதைய மிக முக்கிய தேவை. சிக்னல்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு வழங்கி உயர்கல்வி தர முன் வர வேண்டும்”என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் போலி செய்திகள் -சுப்ரீம் கோர்ட் கவலை
சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் போலி செய்திகள் பரவுவது குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்து உள்ளது.
2. வீட்டிலிருந்து பணிபுரியும் வசதி அடுத்தாண்டு வரை நீட்டிப்பு: கூகுள் நிறுவனம் அறிவிப்பு
கொரோனா பெருந்தொற்று காரணமாக வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை குகூள் அடுத்தாண்டு வரை நீட்டித்துள்ளது.
3. சுப்ரீம் கோர்ட்: முதல் முறையாக ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு
9 நீதிபதிகளுக்கும் இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது .
4. சுப்ரீம் கோர்ட்டுக்கு 3 பெண் நீதிபதிகள் உள்பட புதிதாக 9 நீதிபதிகள் நியமனம் மத்திய அரசு ஒப்புதல்
சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த 9 பேரின் பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
5. எம்.பியால் பாலியால் பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் அருகே தீக்குளித்த இளம்பெண் உயிரிழப்பு
பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியான அதுல் ராய் மீது இளம்பெண் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசாரிடம் சரண் அடைந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.