பிரதமர் மோடியை தொடர்ந்து இன்று அமித் ஷாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி!


பிரதமர் மோடியை தொடர்ந்து இன்று அமித் ஷாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி!
x
தினத்தந்தி 27 July 2021 12:56 PM IST (Updated: 27 July 2021 12:56 PM IST)
t-max-icont-min-icon

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சந்தித்தனர்.

புதுடெல்லி

நேற்று முன்தினம் தனித்தனியாக டெல்லி புறப்பட்டுச் சென்ற அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர்.

இன்று காலை 11.20 மணிக்கு  டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினர்.  இந்த சந்திப்பில் தமிழகத்தின் அரசியல் சூழல், கட்சி சார்ந்த பிரச்னைகள் குறித்து பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.]

இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் வேலுமணி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம் மற்றும் எம்.பிக்கள் நவநீதகிருஷ்ணன், தம்பிதுரை, ரவீந்திரநாத்குமார்,  உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

Next Story