நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல்கள் நெறிக்கப்படுகின்றன - ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் நாங்கள் இடையூறு ஏற்படுத்தவில்லை; எங்கள் கடமையை மட்டுமே செய்கிறோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: -
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல்கள் நெறிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக பயன்படுத்த பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? என்ற கேள்வியைதான் தொடர்ந்து கேட்கிறோம். நாடாளுமன்றத்தில் நாங்கள் இடையூறு ஏற்படுத்தவில்லை; எங்கள் கடமையை மட்டுமே செய்கிறோம்.
பெகாசஸ் மென்பொருள் விவகாரம் குறித்து விவாதம் நடைபெறாது என அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஏன் விவாதம் நடத்தப்படக்கூடாது? இந்தியா போன்ற ஜனநாயக அமைப்பிற்கு எதிராக பெகாசஸ் மென்பொருளை மோடியும் அமித்ஷாவும் ஏன் உபயோகப்படுத்தினர்” என்றார்.
Related Tags :
Next Story