கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது - ராகுல் காந்தி


கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 30 July 2021 10:13 AM GMT (Updated: 30 July 2021 10:13 AM GMT)

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 3 தினங்களாக தொற்று பாதிப்பு 22 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், கேரளாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான   ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.  

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வழிகாட்டுதலையும் கேரள மக்கள் பின்பற்றுமாறு கேரளாவில் உள்ள  சகோதர, சகோதரிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 


Next Story