தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு + "||" + WB extends COVID-19 restrictions till Aug 15 with additional relaxation

மேற்கு வங்காளத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

மேற்கு வங்காளத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
மேற்கு வங்காளத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா,

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவல் இறங்குமுகத்தில் உள்ளது.  கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில் ஊரடங்கை அமல்படுத்தியிருந்த மாநிலங்கள் தொற்று பரவல் குறைந்ததையடுத்து, கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. அந்த வகையில், மேற்கு வங்காளத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 உள் அரங்குகளில் நடைபெறும் அரசு விழாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டுமே  மேற்கூறிய நேரத்தில் பயணிக்க அனுமதி உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மேலும் 1,647- பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 1,647- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று குறைந்தது
மராட்டியத்தில் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
3. ஒடிசாவில் மேலும் 510 பேருக்கு கொரோனா - 6 பேர் உயிரிழப்பு
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 510 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
5. கர்நாடகத்தில் இன்று 1,139 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடகாவில் தற்போது 15,383 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.