பொருளாதார பிரச்சினைக்கு காரணம் நேரு: மத்திய பிரதேச பா.ஜ.க கல்வி மந்திரி


பொருளாதார பிரச்சினைக்கு காரணம் நேரு: மத்திய பிரதேச பா.ஜ.க கல்வி மந்திரி
x
தினத்தந்தி 1 Aug 2021 5:20 AM IST (Updated: 1 Aug 2021 5:20 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அவரது மந்திரிசபையில் மருத்துவ கல்வி மந்திரியாக பதவி வகிக்கிற விஷ்வாஸ் சாரங், போபாலில் நேற்று நிருபர்களிடம் பேசினார்.

பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விஷ்வாஸ் சாரங் பதில் அளிக்கையில், “நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பொருளாதாரத்தை முடக்கி பணவீக்கம் அதிகரித்ததற்கான பெருமை, நேரு குடும்பத்தையே சேரும். பணவீக்கம் ஒரு நாளில் அல்லது 2 நாளில் ஏற்பட்டு விட வில்லை. பொருளாதார அஸ்திவாரம், ஒரு நாளில் அல்லது 2 நாளில் போடப்பட்டு விட வில்லை. நாட்டின் முதல் பிரதமரான நேரு, டெல்லி செங்கோட்டையில் 1947 ஆகஸ்டு 15-ந் தேதி ஆற்றிய சுதந்திர நாள் உரையில் செய்த தவறுகளால்தான் நாட்டின் பொருளாதாரம் பாதித்தது” என கூறினார்.

இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story