இமாசல பிரதேசத்தில் மழை, நிலச்சரிவு: 211 பேர் பலி; ரூ.632 கோடி இழப்பு

இமாசல பிரதேசத்தில் மழை, நிலச்சரிவால் ரூ.632 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது என அரசு தெரிவித்து உள்ளது.
சிம்லா,
இமாசல பிரதேசத்தில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் கனமழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டது.
இந்நிலையில், இமாசல பிரதேசத்தில் மழை, மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் ரூ.632 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது என மாநில பேரிடர் மேலாண் அமைப்பு தெரிவித்து உள்ளது.
இதுபற்றி அதன் இயக்குனர் சுதேஷ் குமார் மோக்தா கூறும்போது, இதுவரை மக்களில் 211 பேர் உயிரிழந்து உள்ளனர். 438 விலங்குகள் பலியாகி உள்ளன. 109 வீடுகள் முழுவதும் பாதிப்படைந்து உள்ளன என தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story