ரூ.16 கோடி மருந்து செலுத்தப்பட்ட புனே சிறுமி உயிரிழப்பு


ரூ.16 கோடி மருந்து செலுத்தப்பட்ட புனே சிறுமி உயிரிழப்பு
x
தினத்தந்தி 3 Aug 2021 2:11 AM GMT (Updated: 3 Aug 2021 2:11 AM GMT)

சிகிச்சைக்காக ரூ.16 கோடி மருந்து செலுத்தப்பட்ட புனே சிறுமி உயிரிழந்தாள்.

ரூ.16 கோடி மருந்து
மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த ஒரு வயது சிறுமி வேதிகா ஷிண்டே. இந்த சிறுமி முதுகெலும்பு தசைநார் சிதைவு (எஸ்.எம்.ஏ.) என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். சிறுமியை நோயில் இருந்து மீட்டெடுக்க ரூ.16 கோடி மதிப்பிலான மருந்து செலுத்தப்பட வேண்டியது இருந்தது. எனவே சிறுமியின் குடும்பத்தினர் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களிடம் உதவி கேட்டனர்.பொதுமக்களும் தாராளமாக உதவி செய்ததால் சிறுமிக்கு ஊசி 
போடுவதற்கான பணம் சேர்ந்தது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் சிறுமிக்கு அந்த ஊசி போடப்பட்டது.

உயிரிழப்பு
இதனால் சிறுமி நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வரத்தொடங்கினாள். அவளது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.இந்தநிலையில் சிறுமிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் அவளை போசரியில் 
உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

ரூ.16 கோடி மருந்து செலுத்தப்பட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story