நீட் தேர்வு 2021- விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 4 Aug 2021 8:18 PM IST (Updated: 4 Aug 2021 8:18 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மருத்துவ படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் செப்டம்பர் 12-ல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 13-ந்தேதி தொடங்கியது. நீட்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 6-ந்தேதி வரை  இணையதளத்தில் பதிவு செய்யலாம் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை ஆகஸ்ட் 10ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 14-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


Next Story