ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தம்: காங்கிரஸ்


ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தம்: காங்கிரஸ்
x
தினத்தந்தி 8 Aug 2021 1:04 AM IST (Updated: 8 Aug 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் கணக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் டுவிட் பதிவில் “ராகுல்காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டுவிட் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.  

அதுவரை, அவர் தனது மற்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருப்பார். நமது மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி, அவர்களின் கோரிக்கைகளுக்காக போராடுவார். ஜெய் ஹிந்த்!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி டுவிட் ஒன்று வெளியிட்டதாகக் கூறி அவரது பதிவு ஒன்றை நேற்று டுவிட்டர் நிறுவனம் நீக்கியிருந்தது. இந்த நிலையில், தற்போது ராகுல் காந்தியின் கணக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story