நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைய 2 நாட்களே உள்ள நிலையில் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைய 2 நாட்களே உள்ள நிலையில் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-இல் தொடங்கி நடைபெற்று வந்தது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன. நேற்றும் இரு அவைகளும் 16 வது நாளாக முடங்கியது.
இன்று காலை அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அதே விவகாரத்தை கிளப்பின. தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை பகல் 12 மணி வரையும் மக்களவை தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 13-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் தொடர் அமளியால் முன்னதாகவே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story