இமாசலபிரதேசத்தில் 2 தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி - மாநில அரசு அறிவிப்பு

இமாசலபிரதேசத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே நுழைய முடியும் என மாநில அரசு அரசு தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
சிம்லா,
இமாசல பிரதேசம் சுற்றுலாவுக்கு பெயர் பெற்றதாகும். இந்தியாவில் இருந்து மட்டுமல்ல, உலகமெங்கும் இருந்து இங்கு சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். இந்த மாநிலத்தில் இனி, கொரோனாவுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே நுழைய முடியும் என மாநில அரசு தலைமைச் செயலாளர் ராம் சுபக் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு நாளை (13-ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. எனவே இனி இமாச்சல பிரதேசத்தில் 2 தடுப்பூசி போடாதவர்கள் நுழைய முடியாது. இது குறித்து ராம் சுபக் சிங் வெளியிட்ட அறிக்கையில், “இமாசல பிரதேச மாநிலத்துக்கு வர விரும்பும் அனைத்து நபர்களும் 2 டோஸ் தடுப்பூசி போட்டு முடித்ததற்கான தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்கு முந்தைய கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழுடன்தான் வரவேண்டும்” என கூறப்பட்டுள்ளது. மாநில மந்திரிசபை கூட்டத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
Related Tags :
Next Story