தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்தால் மீண்டும் ஊரடங்கு: உத்தவ் தாக்கரே + "||" + Stricter curbs again as oxygen demand increases: Uddhav Thackeray

மராட்டியத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்தால் மீண்டும் ஊரடங்கு: உத்தவ் தாக்கரே

மராட்டியத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்தால் மீண்டும் ஊரடங்கு: உத்தவ் தாக்கரே
தினசரி ஆக்சிஜன் தேவை 700 மெட்ரிக் டன்னாக உயர்ந்தால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
ஆக்சிஜன் தேவை
மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா 2-வது அலை உச்சத்தை தொட்டது. இதையடுத்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது பாதிப்பு குறைந்து உள்ளதை அடுத்து பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் 15-ந் தேதி முதல் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இந்தநிலையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜனின் அளவே ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை முடிவு செய்யும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-
2-வது அலையின் போது தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்த போது, ஆக்சிஜன் தேவையும் மிகவும் அதிகமாக இருந்தது. கூடுதலாக சுமார் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பிற மாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டது. தற்போது மாநிலத்தில் தினசரி 1,300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். இந்த நிலையில் ஒரு நாள் ஆக்சிஜன் தேவை 700 மெட்ரிக் டன்னாக உயர்ந்தால் (சுமார் 30 ஆயிரம் நோயாளிகளுக்கும் தேவைப்படும் ஆக்சிஜன்), மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

விழிப்பாக இருக்க வேண்டும்
மாநிலத்தில் வரும் 15-ந் தேதி முதல் இரவு 10 மணி வரை கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல், ஜிம், சலூன் ஆகியவற்றை திறந்து வைக்கலாம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே நாம் புதிய வகை வைரஸ், 3-வது அலைக்கு எதிராக விழிப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாஜகவுடன் மீண்டும் சிவசேனா கூட்டணி அமைக்கிறதா? - உத்தவ் தாக்கரே கருத்தால் பரபரப்பு
மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி நடத்தி வருகிறது.
2. பெண்கள் பாதுகாப்பு குறித்து உத்தவ் தாக்கரே தீவிர ஆலோசனை
சாக்கிநாக்காவில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, பெண்கள் பாதுகாப்பு குறித்து உள்துறை, போலீஸ் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
3. கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது; மக்கள் அதிகம் கூடும் இடங்களை திறக்கக்கோரி எதிர்க்கட்சிகள் போராட வேண்டாம்: உத்தவ் தாக்கரே
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களை திறக்கக்கோரி போராட்டம் நடத்த வேண்டாம் என எதிர்க்கட்சிகளை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
4. மக்கள் நலப்பணிகளுக்கு ஒருவர் கூட இடையூறாக இருக்க அனுமதிக்க மாட்டேன்; நிதின் கட்காரியிடம் உத்தவ் தாக்கரே உறுதி
மக்கள் நலப்பணிகளுக்கு ஒருவர் கூட இடையூறாக இருக்க அனுமதிக்க மாட்டேன் என நிதின் கட்காரிக்கு, உத்தவ் தாக்கரே உறுதி அளித்து உள்ளார்.
5. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.