மும்பையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்ய அனுமதி


மும்பையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்ய அனுமதி
x
தினத்தந்தி 15 Aug 2021 4:42 AM IST (Updated: 15 Aug 2021 4:42 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக கொண்டாப்படும் நிலையில், மராட்டிய மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகள் அமலுக்கு வர உள்ளது. ஓட்டல்கள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுடன் திறக்கலாம் என்றும் அதன் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மராட்டிய தலைநகர் மும்பையில் இன்று முதல் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரெயில்களில் பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி 14 நாட்கள் ஆகியிருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இன்றி ரெயில்களில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட பயணிகளிடம் ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று மராட்டிய மாநில அரசு தெரிவித்துள்ளது.

Next Story