கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 2 பெண்கள் கைது; என்.ஐ.ஏ. நடவடிக்கை


கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 2 பெண்கள் கைது; என்.ஐ.ஏ. நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Aug 2021 12:16 AM IST (Updated: 18 Aug 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 2 பெண்களை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.



புதுடெல்லி,

ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பெண்களை கேரளாவின் கண்ணூரில் வைத்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நேற்று (செவ்வாய் கிழமை) கைது செய்துள்ளது.

அவர்கள் மிஜா சித்தீக் மற்றும் ஷிபா ஹாரிஸ் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 2 பெண்களும் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைதளங்களில் பக்கங்களை உருவாக்கி, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் முஸ்லிம் இளைஞர்களை பணிக்கு அமர்த்துவது, அவர்களை ஊக்கப்படுத்துவது உள்ளிட்ட விசயங்களில் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.


Next Story