உத்திரப்பிரதேசத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பதிவு


உத்திரப்பிரதேசத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பதிவு
x
தினத்தந்தி 3 Oct 2021 2:44 AM GMT (Updated: 3 Oct 2021 2:44 AM GMT)

உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் வரலாறு கானாத கனமழை நேற்று பெய்தது.

உத்திரப்பிரதேசம்,

உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் வரலாறு கானாத கனமழை நேற்று பெய்தது. இதனால், சாலைகள், மற்றும் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.  

தொடர் மழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தேங்கிய மழைநீரை வெளியேற்ற நகராட்சி அமைப்பானது சரியான முன்னேற்பாடுகளை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். 

உத்திரப்பிரதேசத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவாக  மழை பதிவானது. மாநிலத்துல் நேற்று ஒரே நாளில் 193 மிமீ மழை பதிவாகி உள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் பதிவுகளின்படி, கடந்த 1894 -ஆம் ஆண்டில் கோரக்பூர் மாவட்டத்தில் 218.7 மிமீ மழை பதிவானது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

Next Story