தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்


தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 3 Oct 2021 9:03 AM GMT (Updated: 3 Oct 2021 9:03 AM GMT)

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் போது அல்லது அதற்குப் பிறகு வெற்றி கொண்டாட்டமோ,ஊர்வலமோ நடைபெறக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

கொல்கத்தா, 
 
மேற்கு வங்காளத்தில் பவானிபூர், சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதால் அக்கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. பவானிபூர் உள்பட ஏனைய இரண்டு தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகிக்கிறது.  இதனால், அக்க்

இந்த நிலையில் ,மேற்கு வங்க இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் போது அல்லது அதற்குப் பிறகு வெற்றி கொண்டாட்டம் கூடாது என்பதை உறுதி செய்யுமாறு  மேற்கு வங்க அரசுக்கு  தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் போது அல்லது அதற்குப் பிறகு வெற்றி கொண்டாட்டமோ, ஊர்வலமோ நடைபெறக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை நடக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும்படியும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story