தேசிய செய்திகள்

மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் + "||" + CBI file status report in a sealed cover before Calcutta High Court in post-poll violence case

மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்

மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்
மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை அறிக்கையாக ஐகோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியானது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது.

சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து மேற்குவங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் ரீதியிலான வன்முறை வெடித்தது. 

குறிப்பாக, பாஜக கட்சி, திரிணாமுல் கட்சியினர் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் கொலை, கூட்டுபாலியல் பலாத்காரம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதனை தொடந்து விசாரணையை தொடங்கிய சிபிஐ மேற்குவங்காள தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை சிபிஐ கொல்கத்தா ஐக்கோர்ட்டில் சீல் இடப்பட்ட கவரில் அறிக்கையாக இன்று தாக்கல் செய்துள்ளது. அதேபோல், இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணையின் தற்போதைய நிலையை சீல் இடப்பட்ட கவரில் அறிக்கையாக ஐகோர்ட்டில்  தாக்கல் செய்துள்ளது. 

இதனையடுத்து, தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 8-ம் தேதி நடைபெறும் என கொல்கத்தா ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிப்பிற்கு எதிர்ப்பு: மேற்குவங்காள சட்டசபையில் தீர்மானம்
எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிப்பிற்கு எதிராக மேற்குவங்காள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2. மேற்குவங்காளத்தில் நவ.15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
மேற்குவங்காளத்தில் நவம்பர் 15-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.
3. மேற்குவங்காளம்: பாஜக இளைஞரணி துணைத்தலைவர் சுட்டுக்கொலை
மேற்குவங்காளத்தில் மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
4. நான் முதல்-மந்திரியாக தொடரவேண்டுமானால் மழை பெய்தாலும் வாக்களிக்க வாருங்கள்; மம்தா பேச்சு
நான் முதல்-மந்திரியாக தொடர வேண்டுமானால் மழை பெய்தாலும் வீட்டை விட்டு வெளியே வந்து எனக்கு வாக்களிக்களியுங்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
5. மேற்குவங்காளம்: ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
மேற்குவங்காளத்தில் ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.