ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரித்துள்ளது: சிவசேனா காட்டம்

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370- நீக்கிய பின்னரும் அங்கு சூழல் மேம்படவில்லை என்று சிவசேனா விமர்சித்துள்ளது.
மும்பை,
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக வெளி மாநில தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நடப்பு மாதத்தில் மட்டும் அப்பாவி மக்கள் 11 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் வெளி மாநிலத்தவர்கள் குறிவைக்கப்படும் சம்பவம் கவலை அளிப்பதாக சிவசேனா தெரிவித்துள்ளது.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்செய் ராவத் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது. பீகாரை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள், காஷ்மீரி பண்டிட்கள், சீக்கியர்கள் குறிவைக்கப்படுகின்றனர்.
பாகிஸ்தானை குறிப்பிட்டால் நீங்கள் சர்ஜிக்கல் தாக்குதல் பற்றி பேசுகிறீர்கள். ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து உள்துறை அமைச்சரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் விளக்கம் அளிக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370- நீக்கிய பிறகும் அங்கு சூழல் மேம்படவில்லை. பயங்கரவாதம் அதிகரித்துள்ளது” என்றார்.
Related Tags :
Next Story