சீருடை, புத்தகம் வாங்க பெற்றோர் வங்கி கணக்கில் பணம்: உத்தரப்பிரதேச அரசு முடிவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Oct 2021 9:05 AM GMT (Updated: 23 Oct 2021 9:05 AM GMT)

மாணவர்கள் சீருடை, புத்தகம் வாங்க பெற்றோர் வங்கி கணக்கில் பணம் செலுத்த உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவசமாக பள்ளி சீருடை, புத்தகம், பை, காலணிகள் வழங்கும் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகிறது. 

இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில், இந்த பொருட்களை இலவசமாக வழங்குவதற்கு பதிலாக, பெற்றோர்களின் வங்கிக்கணக்கிற்கு பணமாக அனுப்ப உத்திரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. 

இதுதொடர்பாக உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் சட்டமன்ற கூட்டம்  நடைபெற்றது. 

அதன்படி, இனி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், பை, காலணி, காலுறை, ஸ்வெட்டர் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கு பதிலாக அவர்களின் பெற்றோரின் வங்கிக் கணக்கில் பணமாக அனுப்பப்படும். இதற்காக ரூ.1800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1.6 கோடி மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

Next Story