காஷ்மீர்: பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்த நபர் கைது - கையெறி குண்டு பறிமுதல்


காஷ்மீர்: பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்த நபர் கைது - கையெறி குண்டு பறிமுதல்
x
தினத்தந்தி 23 Oct 2021 6:12 PM GMT (Updated: 23 Oct 2021 6:12 PM GMT)

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்த நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்து மற்றும் சீக்கிய= மதத்தினரை குறிவைத்து பயங்கரவாதிகள் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். 

இந்த தாக்குதலை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் கிட்சமா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இன்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்த பரூக் அகமது மாலிக் என்பவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாலிக்கிடம் இருந்து 1 கையெறி குண்டு, துப்பாக்கித்தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story