இந்தியாவில் செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசி 102.10 கோடி


இந்தியாவில் செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசி 102.10 கோடி
x
தினத்தந்தி 24 Oct 2021 7:29 PM GMT (Updated: 24 Oct 2021 7:29 PM GMT)

இந்தியாவில் செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 102.10 கோடி ஆகும்.


புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ந்தேதி தொடங்கி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.  இதுவரை, 100 கோடி தடுப்பூசி இலக்கை எட்டி இந்தியா சாதனை படைத்து உள்ளது.  இவற்றில் இந்தியாவில் 2வது டோஸ் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 31% ஆகும்.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 102.10 கோடி ஆகும் என தெரிவித்து உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 77,40,676 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.  இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.17 சதவீதம் என்ற அளவில் உள்ளது.


Next Story