ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா? ஆர்யன் கான் தரப்பில் வாதாடும் முன்னாள் அடர்னி ஜெனரல்


ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா? ஆர்யன் கான் தரப்பில் வாதாடும் முன்னாள் அடர்னி ஜெனரல்
x
தினத்தந்தி 26 Oct 2021 5:22 AM GMT (Updated: 26 Oct 2021 5:32 AM GMT)

சொகுசு கப்பலில் போதைவிருத்தில் பங்கேற்ற வழக்கில் கைதாகியுள்ள ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

மும்பை, 

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆர்யன் கான் மற்றும் சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் கடந்த 8-ம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 2 முறை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், 2 முறையும் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஆர்யன் கான் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 3-வது முறையாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது ஜாமீன் மனு மும்பை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. 

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆர்யன் கான் சார்பில் மத்திய அரசின் முன்னாள் அடர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடுகிறார். 

மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞரே ஆஜராக உள்ள நிலையில் இந்த வழக்கில் இன்று நடைபெற உள்ள ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.    

Next Story