மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி இன்று ஆலோசனை


மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை  மந்திரி இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 27 Oct 2021 4:40 AM GMT (Updated: 27 Oct 2021 5:05 AM GMT)

இந்த ஆலோசனையின் போது தடுப்பூசி போடும் பணியை மேலும் விரைவு படுத்துவது குறித்து பேசப்படும் என்று கூறப்படுகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கணிசமாக கட்டுக்குள் உள்ளது. எனினும் பண்டிகை காலங்களில் தொற்று பரவும் அபாயம் இருப்பதால், மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. 

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணியும் இந்தியாவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் 100 கோடி டோஸ்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டது.  இந்த நிலையில், மாநில சுகாதரத்துறை மந்திரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார். 

இந்த ஆலோசனையின் போது தடுப்பூசி போடும் பணியை மேலும் விரைவு படுத்துவது குறித்து பேசப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல்,  சில மாநிலங்களில் புதிய வகை ஏ.ஒய் 4.2 வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளதால், அது குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் எனத்தெரிகிறது. 

Next Story