77% பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை மந்திரி


77% பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை மந்திரி
x
தினத்தந்தி 27 Oct 2021 3:30 PM GMT (Updated: 27 Oct 2021 3:30 PM GMT)

தகுதியுடைய மக்களில் 77 % பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கும் அதனைத் தொடர்ந்து, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் தகுதியுடைய மக்களில் 77 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும் 32 சதவிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

ஆனால், நாட்டில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்களில் 10 கோடிக்கும் அதிகமானோர் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ளவில்லை. ஆகையால், தகுதியான மக்கள் 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என மன்சுக் மாண்டவியா கூறினார்.

Next Story