2 மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்: கேரள முதல்-மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


2 மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்: கேரள முதல்-மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 27 Oct 2021 4:29 PM GMT (Updated: 27 Oct 2021 4:29 PM GMT)

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக 2 மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவுவதற்கு தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார்

மேலும், முல்லை பெரியாறு அணை தொடர்பாக இரண்டு மாநில (தமிழ்நாடு, கேரளா) மக்களின் நலனும் பாதுகாக்கப்படும். அதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story