இந்தியா அமைதியை விரும்பும் நாடு - ராஜ்நாத் சிங்


இந்தியா அமைதியை விரும்பும் நாடு - ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 28 Oct 2021 9:06 AM GMT (Updated: 28 Oct 2021 9:06 AM GMT)

இந்தியா அமைதியை விரும்பும் நாடாகவே இருந்து வருகிறது... அதுவாகவே இருக்கும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சண்டிகர்,

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சண்டிகரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழத்தின் பரிசோதனை கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசுகையில், இந்தியா அமைதியை விரும்பும் நாடாகவே இருந்து வருகிறது... அதுவாகவே இருக்கும். நமது பக்கத்தில் இருந்து பிரச்சினைகளை ஏற்படுத்துவது என்பது நமது மதிப்பிற்கு எதிரானதாகும். ஆனால், தேவை ஏற்படும் பட்சத்தில் எந்த வித சவால்களையும் சந்திக்க நமது நாடு தயாராக உள்ளது.

இரண்டு அறைகளுடன் தொடங்கப்பட்ட இந்த பரிசோதனைக்கூடம் தற்போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பத்தை வழங்கும் வல்லமைகொண்ட பரிசோதானை மையமாக மாறியுள்ளது’ என்றார்.

Next Story