போதைபொருள் வழக்கில் கைதான கொரோனா பாதிக்கப்பட்ட பெண் தனிமைபடுத்தல் முகாமிலிருந்து தப்பியோட்டம்


போதைபொருள் வழக்கில் கைதான கொரோனா பாதிக்கப்பட்ட பெண் தனிமைபடுத்தல் முகாமிலிருந்து தப்பியோட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2021 11:09 AM GMT (Updated: 28 Oct 2021 11:09 AM GMT)

போதைபொருள் வழக்கில் கைதான கொரோனா பாதிக்கப்பட்ட பெண் தனிமைபடுத்தல் முகாமில் இருந்து தப்பியோடியுள்ளார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் போதைபொருள் விற்றதாக அஜந்தி தேவி என்ற பெண்ணை அவரது 3 கூட்டாளிகளுடன் போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் சிறையில் அடைப்பதற்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்தனர். அதில், அஜந்தி தேவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதனை தொடர்ந்து, கொரோனா பாதிக்கப்பட்ட அஜந்தி தேவி பலமுவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைபடுத்தல் முகாமில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் முகாமில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜந்தி தேவி இன்று முகாமில் இருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய அஜந்தி தேவியை மீண்டும் கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story