டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரிப்பு


டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரிப்பு
x
தினத்தந்தி 21 Nov 2021 3:34 AM GMT (Updated: 21 Nov 2021 3:34 AM GMT)

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில், தொடர்ந்து சில நாட்களாக, இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்து காணப்படுகிறது. டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

காற்று மாசின் காரணமாக நவம்பர் 21-ந்தேதி வரை கட்டுமான பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்களை தவிர பிற வாகனங்கள் டெல்லி மாநகர் பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் இன்று காற்று தரக் குறியீடு 347 ஆக உள்ளதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று காற்று தரக் குறியீடு 355 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எட்டாவது நாளாக டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையிலேயே நீடிக்கிறது.


Next Story