சத்தீஷ்காரில் நக்சல் பாதித்த பகுதிகளில் கொரோனா தடுப்பூசி பணிகள்


சத்தீஷ்காரில் நக்சல் பாதித்த பகுதிகளில் கொரோனா தடுப்பூசி பணிகள்
x
தினத்தந்தி 29 Nov 2021 12:21 AM GMT (Updated: 2021-11-29T05:51:58+05:30)

சத்தீஷ்காரில் நக்சல் பாதித்த பகுதிகளில் கொரோனா தடுப்பூசி பணிகள் நடத்தப்பட்டு உள்ளன.



ராய்ப்பூர்,

சத்தீஷ்காரின் பல்ராம்பூர் நகரில் சுன்சுனா மற்றும் பண்டாங் ஆகிய கிராமங்களில் நக்சலைட்டுகள் அதிக அளவில் உள்ளனர்.  இந்த நிலையில், அந்த பகுதிகளுக்கு சுகாதார பணியாளர்கள் வாகனங்களில் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதுவரை 1,500 பேரில் 50% அளவுக்கு கொரோனா தடுப்பூசி பணிகள் நடத்தப்பட்டு உள்ளன.  மீதமுள்ளவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story